ஆற்காடு அடுத்த, ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில், 1,008 கலச பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04பிப் 2019 12:02
ஆற்காடு: வேலூர் மாவட்டம், ஆற்காடு அடுத்த, ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில், உலக மக்கள் நன்மைக்காக, 1,008 கலச பூஜை தொடக்க விழா, நேற்று 3ல் நடந்தது. கோவில் பரம்பரை அறங்காவலர் பாலமுருகனடிமை சுவாமிகள் துவக்கி வைத்தார். கலவை சச்சிதானந்த சுவாமி கள், அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கோவில் செயல் அலுவலர் சிவஞானம், பெங்களூரு வேத விஞ்ஞான ஆகம பாடசாலை முதல்வர் சுந்தரமூர்த்தி உட்பட பலர் பங்கேற் றனர். தொடர்ந்து, ஸ்கந்த யாகம், அஷ்டோத்ர கலச ஸ்தாபன 1,008 கலச பூஜை, மகா சண்டியாக பூஜை, மகா கணபதி யாகம் நடந்தது.