பதிவு செய்த நாள்
11
பிப்
2019
04:02
சேத்தியாத்தோப்பு: பாளையங்கோட்டை மேல்பாதி கிராமத்தில் திரவுபதி அம்மன்,விநாயகர், ஐயப்பன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று (பிப்., 10ல்) நடந்தது.
அதற்கான யாக பூஜை கடந்த 8ம் தேதி காலை 9.00 மணிக்கு துவங்கியது. அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புன்யாகவசனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது.நேற்று (பிப்., 10ல்) காலை 7.00 மணிக்கு பிரம்ம சுத்தி ரஷாபந்தனம், வேதிகாக அர்ச்சனை தீபாராதனை நடந்தது.
கோ பூஜை, தன பூஜை, நவக்கிரக பூஜை, யாத்ரா தானம், காலை 9.50 மணிக்கு கடம் புறப்பாடாகி 10.00 மணிக்கு, திரவுபதி அம்மன் கோவில் விமான கலசத்தில் புனித கங்கை நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது.பின்னர், பரிவார தெய்வங்களான விநாயகர், ஐயப்பன், மூலவர் திரவுபதியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கான யாக பூஜைகள் சிவாச்சாரியார் குருமூர்த்தி குருக்கள் தலைமையில் நடந்தது.
ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் மற்றும் பாளையங்கோட்டை மேல்பாதி கிராம மக்கள் செய்திருந்தனர்.