பதிவு செய்த நாள்
11
பிப்
2019
03:02
திருப்பூர்:திருப்பூர், தாராபுரம் ரோடு, சேரன் தொழிலாளர் காலனி, ஸ்ரீகுபேர விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று (பிப்., 10ல்)நடந்தது.
ஸ்ரீகுபேரவிநாயகர், ஸ்ரீகுபேரலட்சுமி, பாலமுருகர் மற்றும் பரிவார தெய்வங்கள் கும்பாபிஷேக விழா, 7ம்தேதி கணபதி வழிபாடுடன் துவங்கியது. மங்கள இசையுடன், வாஸ்து பூஜை, அங்குரார்ப்பணம், கும்ப அலங்காரம் மற்றும் ஆறுகால பூஜைகள் நடந்தன.நேற்று காலை, 6:30 மணிக்கு, ஆறாம் கால யாகசாலை பூஜைகள், வேத, மந்திரங்கள் முழுங்க நடந்தது. கலசங்கள், யாகசாலையில் இருந்து புறப்பாடாகி, காலை, 8:30 மணி முதல், 10:00 மணிக்குள், கும்பாபிஷேகம் நடந்தது.
காலை, 10:00 மணி முதல் அன்னதானம் வழங்கப்பட்டது. தமிழக அரசு, பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பிளாஸ்டிக் இல்லாத கும்பாபிஷேக விழாவாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இயன்றவரை பிளாஸ்டிக் தவிர்க்கப்பட்டது.
இதில், சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.