பதிவு செய்த நாள்
20
பிப்
2019
02:02
சூலுார்: சூலுார் நாகமாதா கோவிலில் பொங்கல் விழாவை ஒட்டி, நடந்த அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.சூலுாரில் உள்ள ஸ்ரீசக்தி பஞ்சாட்சரி நாகமாதா கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு, கடந்த, 12ம் தேதி வாஸ்து பூஜையுடன், 14வது கும்பாபிஷேக விழா மற்றும் பொங்கல் விழா துவங்கியது.மறுநாள் காலை கொடியேற்றமும், பூதபலி, அத்தாழ பூஜை நடந்தன. தினமும் அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன. நாட்டிய நிகழ்ச்சி, பக்தி பாடல்கள் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.கடந்த, 17ம் தேதி காலை, ஸ்ரீ நாக மாதாவுக்கு பொங்கல் நைவேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டது. சிறப்பு பூஜைகள் முடிவுற்று அன்னதானம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.நேற்று முன்தினம் நடை திறக்கப்பட்டு ஆராட்டு பலி, கொடியிறக்கம் பறையெடுப்பு நடந்தது.