பதிவு செய்த நாள்
04
மார்
2019
02:03
தேவாரம்:மாசிப்பச்சைக்காக கிராமப்புற கோயில்கள் வர்ணம் பூசி, புதுப்பொலிவு பெற்று வருகின்றன. குலதெய்வ வழிபாட்டிற்கு பங்காளிகள் தயாராவதால், கருப்பு கிடா விலை எகிறியுள்ளது.
தமிழகத்தில் பாரம்பரியமாக குலதெய்வ வழிபாடு மாசியில் வரும் சிவராத்திரியன்று தொடர்ந்து இரண்டு நாட்கள் விழாவாக கொண்டாடுவார்கள். இதற்காக ஒரே சாமியை கும்பிடும் பங்காளிகள் தங்கள் கோயில்களை புதுப்பித்து வருகின்றனர்.
கோயிலை சுற்றி பந்தல் அமைத்தல், ஒலிபெருக்கி தயார் செய்தல் என குலதெய்வ வழிபாட்டிற்கு தென்மாவட்டங்கள் தயாராகியுள்ளன. தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர்க்கு திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள கடற்கரை கிராமங்களில் குலதெய்வ கோயில்கள் உள்ளன. அங்கிருந்து பிடி மண் எடுத்து வந்து தாங்கள் வசிக்கும் பகுதியில் கோயில் அமைத்து மாசிபச்சையன்று வழிபாடு நடத்துகின்றனர். இதற்காக வரி வசூலித்து, கிடா விருந்துக்கு தயார் படுத்தி வருகின்றனர்.
கற்குவேல் அய்யனார் கோயில் நிர்வாகி நாகராஜன், குடும்பம் தழைத்தோங்கவும், தொழில், விவசாயம் சிறப்பாக நடைபெற குலதெய்வங்கள் வழிகாட்டும் என்பது ஐதீகம். வேண்டுதல் நிறைவேறும் போது கிடா வெட்டி விருந்து வைப்பது வழக்கம். கருப்பு ஆட்டு கிடா வெட்டுவதை பெரும்பாலானோர் விரும்புவதால், இந்த சீசனில் அந்த கிடாக்களுக்கு கூடுதல் விலையாக உள்ளது. இன்று (மார்ச்., 4ல்) மகாசிவராத்திரி முடிந்த பின், குலதெய்வ வழிபாடு சிறப்பாக நடக்கும் என்றார்.