வேலை செய்வதற்கு முன்பே பணத்தைப் பெறுவது,அட்வான்ஸ் பேமென்ட். இப்படி வாங்கிய முதல் ஆள் யார் தெரியுமா? மதுரை சொக்கநாதர் தான். வெள்ளம் பெருக்கெடுத்தோடிய வைகையின் கரையை அடைக்க வீட்டுக்கொரு ஆள் வரும்படி மன்னர் உத்தரவிட்டார். வந்தி என்னும் சிவபக்தை, முதுமை காரணமாக, தனக்கு பதிலாக, அங்கு வந்த ஒரு வேலையாளை அனுப்பினாள். வந்தது சிவன் என அவளுக்குத் தெரியாது. தம்பி! எனக்காக கரையடைக்கச்செல். நான் விற்கும் பிட்டை கூலியாக வாங்கிக் கொள், என்றாள். அவளைச் சோதிக்க எண்ணிய சிவன், வேலையைத் தொடங்கும் முன்னே கூலி தரும்படி கேட்டார். அவளும் சம்மதித்து சூடான பிட்டைக் கொடுத்தாள். சிவனும் வாயில் போட்டுக் கொண்டு ஆனந்தப் பெருக்கில் கூத்தாடினார். சேலரி அட்வான்ஸ் வாங்குவது எல்லா காலத்திலும் இருந்திருக்கிறது. பெரிய குடும்பஸ்தன் பாவம் செய்யும் கொடியவர்களையும், தன்னை எதிர்த்து நாத்திகம் பேசுபவர்களையும் கூட, கடவுள் ஒருபோதும் வெறுப்பதில்லை. அவர்களும் திருந்த வேண்டும் என்றே அவர் எதிர்பார்க்கிறார். அப்பனே! தெரியாத்தனமாக இவ்வளவு காலம் பாவம் செய்து விட்டேன். என்னை மன்னித்துவிடு! என்று உள்ளம் உருகினால் போதும். ஏற்று அருள்புரிய ஓடிவருவார். குணம் கெட்ட பிள்ளையை வெறுக்காமல் அன்பு காட்டி திருத்த முயற்சிக்கும் தாயாக அவர் இருக்கிறார். அந்த குணத்தை வாத்சல்யம் என்று குறிப்பிடுவர். உலகில் உள்ள அனைத்து உயிர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. அதன் தலைவராக இருப்பவர் கடவுள். அதனால், அவரை பஹு சம்சாரி என்று சொல்வர். இதற்கு பெரிய குடும்பஸ்தன் என பொருள்.