பதிவு செய்த நாள்
21
மார்
2019
03:03
கூடலூர் : ஊட்டி தேசிய நெடுஞ்சாலை விரிவாக பணி காரணமாக மேல்கூடலூர் அருகேயுள்ள சனிபகவான் கோவில், அதே பகுதியில் புதிதாக அமைக்கபடுகிறது.
கூடலூர் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில், தெய்வமலை கிராம அருகிலிருந்து, 21 கோடி ரூபாய் செலவில், ஏழு கி.மீ., தூரம் சாலை விரிவுபடுத்தும் பணிகள் நடந்து வருகிறது.இதன காரணமாக, மேல்கூடலூர் சில்வர் கிளவுட் அருகே, சாலையோரத்தில் உள்ள சனிபகவான் கோவில் இடிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால், கோவிலை மாற்றும் படி, கோவில் கமிட்டியிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு, சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், இப்பிரச்னையை சுமூகமாக தீர்க்கும் வகையில், அதே பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு இன்றி, புதிய கோவில் கட்டி, கோவிலை இடமாற்றி கொள்ள கோவில் கமிட்டி முடிவு செய்தது. அதனை அதிகாரிகளும் ஏற்று கொண்டனர். கோவில் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதிகாரிகள் கூறுகையில், கோவில் கமிட்டியை புதிய கோவிலை அமைத்து, கோவிலை இடமாற்றி கொள்ள சம்மதம் தெரிவித்து, பணிகளை துவங்கி யுள்ளனர். இதில் எந்த பிரச்னையும் இல்லை என்றனர்.