ஸ்ரீவி., பெரிய மாரியம்மன் பூக்குழித் திருவிழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2019 12:03
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பெரியமாரியம்மன் கோயில் பூக்குழித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை 5:15 மணிக்கு மஹாகணபதி அனுக்ஞை பூஜையும், அதனை தொடர்ந்து வாஸ்து சாந்தி, புண்யாஹவாசனம், கும்ப ஆவாஹனம் மற்றும் காப்பு கட்டுதல் நடந்தது.
பின்னர் காலை 6:30 மணிக்கு மாரியம்மன்கோயில் தெருவிலிருந்து நகரின் பல்வேறு வீதிகள் வழியாக கோயிலுக்கு கொடிபட்டம் கொண்டு வரப்பட்டது. அதனையடுத்து அம்மன் மற்றும் கொடிபட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, காலை 8:48 மணிக்கு கோயில் அர்ச்சகர் ஹரி, கொடிபட்டம் ஏற்றினார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் குலவையிட்டு அம்மனை வணங்கினர். இதனை தொடர்ந்து தினமும் காலையில் அம்மன் மண்டகபடி எழுந்தருளலும், இரவு வெவ்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதியுலாவும் நடக்கிறது. ஏப்ரல் 4 அன்று பகல் 12:15 மணிக்குமேல் பக்தர்கள் பூக்குழி இறங்குதலும், ஏப்ரல் 5 அன்று நண்பகல் 12:15 மணிக்கு திருத்தேர் இழுத்தலும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் இளங்கோவன், செயல்அலுவலர் சுந்தரராசு செய்துள்ளனர்.