பதிவு செய்த நாள்
04
ஏப்
2019
02:04
அவிநாசி : அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் உண்டியல் நேற்று (ஏப்., 3ல்)திறக்கப்பட்டது; 107 கிராம் தங்கம், 108 கிராம் வெள்ளியுடன் 12.52 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் உண்டியல் நேற்று (ஏப்., 3ல்) திறக்கப் பட்டு, தேக்கம்பட்டி உதவி ஆணையர் ராமு முன்னிலையில், கோவில் ஆய்வாளர் சண்முக சுந்தரம், செயல் அலுவலர் லோகநாதன் மேற்பார்வையில் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், அவிநாசிலிங்கேஸ்வரர், கருணாம்பிகையம்மன், சுப்ரமணியர், விநாயகர் உள்ளிட்ட கோவிலில் உள்ள, 15 உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டன.
இதில் பக்தர், 12 லட்சத்து 52 ஆயிரத்து 371 ரூபாய், 107 கிராம் தங்கம், 108 கிராம் வெள்ளியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர். காணிக்கை எண்ணும் பணியில், திருப்பூர் மகா விஷ்ணு சேவா சங்கத்தினர் ஈடுபட்டனர்.