பதிவு செய்த நாள்
15
ஏப்
2019
04:04
திருப்பூர்:சின்னாண்டிபாளையத்தில் உள்ள, ஸ்ரீசித்ரகுப்தர் கோவிலில், 90ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா, வரும், 19ம் தேதி நடைபெறுகிறது.திருப்பூர் சின்னாண்டிபாளையத்தில், ஸ்ரீசித்திர குப்தர் கோவில் பிரசித்தி பெற்றது.
தமிழகத்திலேயே, காஞ்சிபுரத்துக்கு அடுத்தபடியாக, திருப்பூர், சின்னாண்டிபாளையத்தில் உள்ள சித்ரகுப்தர் அருள்பாலிக்கிறார். கோவிலில், 90ம் ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா, 19ம் தேதி நடக்கிறது.வரும், 18ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, மங்கள இசையுடன், சித்ரகுப்தர் உற்சவர் திருவீதியுலா, பால்குடம் ஊர்வலம், அபிஷேக பூஜைகள் நடக்கும்.வரும், 19ம் தேதி காலை, 4:00 மணிக்கு, ஸ்ரீகணபதி ஹோமம், சித்ரகுப்தர் சிறப்பு பூஜை, யாகபூஜை, பூர்ணாஹூதி வழிபாடுகள் நடக்கிறது.காலை, 9:00 மணிக்கு, சித்ரகுப்தருக்கு, 16 வகையான திரவியங்களால், அபிஷேகம் மற்றும் புனித கலசநீர் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.