பதிவு செய்த நாள்
29
ஏப்
2019
03:04
திருவொற்றியூர் : திருவொற்றியூர், தியாக ராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. 2,000 ஆண்டுகள் பழமையான கோவில் என்பதால், பக்தர்கள் வருகை அதிகளவில் இருக்கும்.சமீபமாக, வெயில் காரணமாக, கோவில் வளாகத்தில், மணல் மற்றும் சிமென்ட் தரையில், வெறும் காலுடன் நடக்க முடியாமல், பக்தர்கள் தவித்தனர்.அதற்கு தீர்வாக, கோவில் வளாகத்தில், பிரகாரத்தை சுற்றிவர, தரை விரிப்புகள் போடப்பட்டு உள்ளன. கோவில் நிர்வாகத்தின் இச்செயல்பாடு, பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.