பெரியநாயக்கன்பாளையம் மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2019 01:04
பெ.நா.பாளையம்:சின்ன தடாகம் அருகே உள்ள சோமையனூர் மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவத்தையொட்டி, சக்தி கரகம் அழைத்தல், பொங்கல், மாவிளக்கு பூஜைகள் நடந்தன. கடந்த, 14ல் கம்பம் நடுதலுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, பூச்சட்டி அமைத்தல், நகை அழைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று (ஏப்., 29ல்) காலை சக்தி அழைத்தல், பொங்கல், மாவிளக்கு பூஜைகள் நடந்தன. இன்று (ஏப்., 30ல்)மாலை எருது அழைத்தல், புதன்கிழமை மஞ்சள் நீராடுதல் மற்றும் இரவு மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.