பதிவு செய்த நாள்
30
ஏப்
2019
12:04
பண்ருட்டி: திருவாமூரில் அப்பர் அவதரித்த தனி கோவிலில், சதய 3 நாள் குருபூஜை விழா நேற்றுடன் (ஏப்., 29ல்) நிறைவு பெற்றது.பண்ருட்டி அடுத்த திருவாமூர் திருநாவுக்கரசர் அவதார கோவிலில், ஆண்டுதோறும் அப்பர் சுவாமிகளின் குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு அப்பர் சுவாமிகளின் குருபூஜை விழா கடந்த 27ம் தேதி துவங்கியது. நேற்றுமுன் தினம் 28ம் தேதி காலை 6:00 மணிக்கு சிவபூஜை, 8:00 மணிக்கு மங்கள இசை, 9:00 மணிக்கு திருமுறை இன்னிசை, காலை 10:00 மணிக்கு நவக்கிரக ஹோமம், அபிஷேகம் நடந்தது. நேற்று 29ம் தேதி திங்கட்கிழமை காலை 6:00 மணிக்கு சிவபூஜை, 7:00 மணிக்கு மங்கள இசை, காலை 10:00 மணிக்கு மகந்யாச ருத்ர ஹோமம் நடந்தது.
மதியம் 11:00 தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள் அருளாசி வழங்கினர்.பகல் 1:00 மணிக்கு மகேஸ்வர பூஜை, மாலை 5:00 மணிக்கு மங்கள இசை,6:00 மணிக்கு திருமுறை இன்னிசை, இரவு 9:30 மணிக்கு உற்சவர் அப்பர் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலாவும், பின் திருமுறை ஓதி அப்பர் ஐக்கிய காட்சிகளுடன் 3 நாள் திருவிழா நிறைவு பெற்றது.