பதிவு செய்த நாள்
02
மே
2019
03:05
கரூர்: கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா வரும், 12ல், கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. அன்று காலை, பாலம்மாள்புரத்தில் இருந்து பரம்பரையாக கம்பம் அளிப்ப வர்கள் பூஜை செய்து, கம்பத்தை ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் அளிப்பர். மாலையில், அமராவதி ஆற்றுக்கு கம்பம் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தி ஊர்வல மாக கொண்டு வரப்படும். வழிநெடுக பக்தர்கள் வழிபாட்டுக்கு பின், கோவிலு க்கு கொண்டு வந்து கம்பம் சாட்டப்படும். தினமும் பக்தர்கள் புனித நீர் ஊற்றி வழிபடுவர். வரும், 17ல் பூச்சொரிதல் நடக்கிறது.
நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து, மாரியம்மனுக்கு பூ அலங்காரம் செய்து, மேளதாளம் கலைநிகழ்ச்சிகளுடன் பூத் தட்டு ரதங்கள் கோவிலை வந்தடையும். 19ல் காப்புக் கட்டுதல் நடக்கிறது. மாரியம்மன், காவல் தெய்வமான மாவடி ராமசுவாமி, அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலா நடைபெறும். 26ல் பால்குடம், மாவிளக்கு பூஜை. 27ல், திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. 27 மற்றும் 28ம் தேதிகளில், அக்னிச்சட்டி எடுத்தல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. கம்பம் ஆற்றில் விடும் விழா 29ல் நடக்கிறது. அன்று மாலை கோவிலில் இருந்து கம்பம் எடுத்துவரப் பட்டு, வழிநெடுக பக்தர்கள் தரிசனத்திற்கு பின்னர், அமராவதி ஆற்றில் விடப்படும். அப்போது, பிரமாண்ட வாண வேடிக்கை நடக்கும். இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.