அவிநாசி:திருமுருகன் பூண்டியில் செயல்படும், திருப்பூர் திருமுறை திருக்காவணம் அறக் கட்டளை சார்பில் சொற்பொழிவு நடந்தது.அரிகர தேசிகர் சுவாமிகள் குழுவினர் பங்கேற்று திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடத்தினர்.தொழில் வளம் பெருக வேண்டும்.
மழை வளம் பெருக வேண்டும். மக்கள் மனம் தெளிவு பெற்று வாழ வேண்டும் என்பது போன்ற நோக்கங்களை முன்வைத்து, பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை இந்நிகழ்ச்சி நடத்தப் படுகிறது என, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர்,நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுவர் சிறுமியர் நாயன்மார் வேடம் தரித்து பங்கேற்றனர்.