பதிவு செய்த நாள்
09
மே
2019
03:05
கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த மும்முடிசோழகன் செடல் முத்துமாரியம்மன் கோவிலில், வரும் 17ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, வரும் 16ம் தேதி காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், மாலை 5:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, மண்டல பூஜை, முதல்கால பூஜையும், தீபாராதனை நடக்கிறது. 17 ம் தேதி காலை 6:00 மணிக்கு கோ பூஜை, இரண்டாம் கால பூஜை, நாடிசந்தானம், காலை 10:00 மணியள வில் கடம் புறப்பாடு, தொடர்ந்து, விநாயகர், செடல்முத்துமாரியம்மன் கோவில் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடக்கிறது.