கொத்தட்டையில் வரும் 21ம் தேதி கூத்தாண்டவர் கோவில் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2019 02:05
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை கூத்தாண்டவர் கோவில் திருவிழா வரும் 21ம் தேதி நடக்கிறது.அதையொட்டி நேற்று (மே., 9ல்) கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. 17ம் தேதி அர்ச்சுணன் திரவுபதி திருகல்யாணம், 19ம் தேதி விராட பருவம் என்னும் மாடு பிடி சண்டை, 20ம் தேதி சுவாமி வீதியுலா நடக்கிறது.
முக்கிய நிகழ்வாக வரும் 21ம் தேதி இரவு அரவாணிகள் திருவிழா நடக்கிறது. 22ம் தேதி காலை 7 மணிக்கு திருத்தேர் உற்சவம், மாலை 5 மணிக்கு 64 அங்க லட்சணம் பொருந்திய அரவான் களப்பலி நிகழ்ச்சியும் நடக்கிறது.இந்த விழாவில், உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வந்து பற்கேற்பர்.விழா ஏற்பாடுகளை, விழாக்குழு நிர்வாகிகள், தில்லைகோவிந்தன், ராஜேந்திரன், சிவராஜ் ஆகியோர் செய்து வருகின்றனர்.