காட்டுமன்னார்கோவில் மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மே 2019 03:05
காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி அருகே உள்ள மகாமாரியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் நடந்தது. காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒட்டர்பாளையம் கிராமத்தில் உள்ள மகாமாரியம்மன் கோவில் தீமிதி உற்சவம், கடந்த 14ம் தேதி துவங்கியது. அம்மனுக்கு விசேஷ அர்ச்சனை நடத்தப்பட்டு, மாலை சுவாமி வீதியுலா நடந்தது. தொடர்ந்து 15ம் தேதி தீமிதி உற்சவம் நடந்தது. உற்சவத்தை தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் கரகம் ஜோடித்து வரப்பட்டு தீக்குண்டத்தில் இறங்கியது. பின்னர் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர் .இரவு காளியாட்டத்துடன் அம்மன் வீதியுலா நடந்தது.