சூலக்கல் மாரியம்மன் கோவில் தேரோட்ட திருவிழா நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஜூன் 2019 01:06
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு சூலக்கல் விநாயகர் மாரியம்மன் கோவிலில் நேற்று (ஜூன்., 3ல்) மகா அபிஷேகத்துடன் தேரோட்ட திருவிழா நிறைவுபெற்றது.சூலக்கல் விநாயகர் மாரியம்மன் கோவிலில், இந்தாண்டு தேர்த்திருவிழா கடந்த மே 13ல் முகூர்த்த தேங்காய் உடைத்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நான்கு நாட்கள் மாரியம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடந்தது.பின், பக்தர்கள் மாவிளக்கு எடுத்தனர்.
இரவு அம்மன் திருக்கல்யாணம் நடந்தது. பின், மே 30ல், மாரியம்மன், விநாயகர் தேருக்கு புறப்பட்டு வரும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 4.00 மணி முதல் நாள் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதேபோல், மே 31ல் இரண்டாம் தேரோட்டமும், ஜூன் முதல் தேதி மூன்றாம் நாள் தேர் வடம் பிடித்து இழுத்து வந்து கோவில் முன்பு நிலை நிறுத்தப்பட்டது. பின், நேற்று (ஜூன்., 3ல்) பிற்பகல் 12.00 மணிக்கு மாரியம்மனுக்கு மகா அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டதுடன் தேர்த்திருவிழா நிறைவு பெற்றது.