தேவகோட்டை:தேவகோட்டை ராம்நகர் உலகமீட்பர் ஆலயத்தில் நவநாள் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பங்கு தந்தை சேசு தலைமையில், சிவகங்கை மறை மாவட்ட தலைமை செயலாளர் பாதிரியார் பாக்கியநாதன் கொடியேற்றி வைத்தார். பாதிரியார்கள் ஆனந்தாகல்லூரி முதல்வர் ஜான்வசந்தகுமார், அமல்ராஜ், ஜோசப் மெட்ரிக் பள்ளி சேசுராஜா, ஆனந்த கல்லூரி டென்சிங் பங்கேற்றனர்.
தொடர்ந்து நவநாள் சிறப்பு திருப்பலி நடந்தது. நல்லிணக்கம் நற்செயல் என்ற பொது தலைப்பில் மறையுரை நடந்தது. கொடியேற்ற நிகழ்ச்சிகளில் ராம்நகர், முள்ளிக்குண்டு, சிகூரணி காயாவயல் உட்பட பல கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.