சென்னை சோலையூரில் நம்மாத்துல ஸ்ரீ மஹாபெரியவா விஜயம் சத்சங்கம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூன் 2019 02:06
நம்மாத்துல ஸ்ரீ மஹாபெரியவா 85வது சத்சங்கம் மிகவும் விமர்சையாக சோலையூர் திரு. சாந்தம் ராம்மோகன் கிரஹத்தில் ஜூன் 10ம் தேதி காலையில் நடைப்பெற்றது. இச்சத்சங்க த்தில் பல ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். ஸ்ரீ மஹா பெரியவாள் பிரதிமைக்கு ஆரத்தி எடுத்து மற்றும் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு நடந்தது. பிறகு மாயவரம் கூத்தனூர் கிராமத்தினருகில் உருவாகி வரும் ஸ்ரீ சங்கராபுரம், ஒரு நூதன வேத கிராமத்தை பற்றி வக்கீல் அண்ணா ஒரு நீண்ட விரிவுரை வழங்கினார்.
"நம்மாத்துல பெரியவா" என்ற தலையங்கத்தின் கீழ் இதுவரை பதினைந்து சத்சங்கம் கடந்த ஒன்றரை மாத காலத்தில் நடந்து முடிந்ததுள்ளது. மேலும் வரும் மாதங்களில், பல நகரங்களில் வெவ்வேறு கிரஹத்திற்கு ஸ்ரீ மஹா பெரியவாள் பிரதிமையுடன் விஜயம் செய்து, ஸ்ரீ சங்கராபுரம், மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு நூதன வேத கிராமம் என்ற தலைப்பில் மேலும் பல சத்சங்கம் நடத்த வைஷ்ணவி டிரஸ்டின் மேனேஜிங் டிரஸ்டி திரு. கி. வெங்கடசுப்பிரமணியன் (வக்கீல் அண்ணா) முடிவு செய்து வெற்றிகரமாக நடந்து வருகின்றது. இதற்கு பக்க பலமாக தசாவதாரம் என்ற ஒரு குழு இயங்கி வருகிறது.