பதிவு செய்த நாள்
19
ஜூன்
2019
12:06
கன்னிவாடி: கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், மூல நட்சத்திர சிறப்பு பூஜை நடந்தது. மூலவர், நந்தி, உற்சவருக்கு, 30 வகை திரவிய அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத் துடன் உற்சவர் பிரகார வலம், திருவாசக பாராயணத்துடன் மகா தீபாராதனை நடந்தது.
ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது.செம்பட்டி கோதண்டராமர் கோயில், அம்பாத் துரை மேலக்கோட்டை பக்த ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயிலில், மூல நட்சத்திர சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.