ஸ்ரீவில்லிபுத்துார், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை விழா துவங்கியது. இதையொட்டி இன்று முதல் ஆகஸ்ட் 1 வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி தரிசனம் செய்வர்.
பக்தர்களின் நலனுக்காக 10க்கு மேற்பட்ட இடங்களில் தகவல் மையங்கள், தாணிப்பாறை அடிவாரத்தில் போலீஸ் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு 1500க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.வழித்தடங்கள் விபரம்பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்ல ஸ்ரீவில்லிபுத்துார், கிருஷ்ணன்கோயில் வழியாக வரும் வாகனங்கள் வத்திராயிருப்பு, சேதுநாராயணபுரம் வழியாகவும், மதுரை, விருதுநகர், தேனியிலிருந்து வரும் வாகனங்கள் அழகாபுரி, மகாராஜபுரம், தாணிப்பாறை விலக்கு வழியாகவும் தாணிப்பாறைக்கு செல்லலாம். திரும்பி செல்லும்போது சிவசங்கு மடத்தின் விலக்கு ரோடு, மகாராஜபுரம் வழியாக செல்லவும் போக்குவரத்து வழித்தடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.