பதிவு செய்த நாள்
01
ஆக
2019
03:08
குளித்தலை: ஆடி அமாவாசையை முன்னிட்டு, குளித்தலை காவிரி ஆற்றில் ஏராளமான பொதுமக்கள் நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
குளித்தலை கடம்பர்கோவில், கடம்பன் துறை காவிரி ஆற்றின் கரையில் உள்ளது. நேற்று 31ல் ஆடி அமாவாசை என்பதால், ஏராளமானோர் அதிகாலை முதலே ஆற்றில் நீராடி, தர்ப் பணம் தர குவிந்தனர். குளித்தலை மட்டுமின்றி சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங் களிலிருந்து பொதுமக்கள் கடம்பன் துறைக்கு வந்திருந்தனர். காவிரியில் நீராடி, வாழை இலையில் பச்சரிசி, பழங்கள், காய்கறிகள் வைத்து படையல் இட்டு, தீபமேற்றி சிவாச்சாரி யார்கள் வேதம் ஓத, தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டனர். பசுக்களுக்கு அகத் திக்கீரை கொடுத்தனர். பின் கோவிலுக்கு சென்று கடம்பவனநாதரை வணங்கினர்.
* குளித்தலை பகுதி கோவில்களில், சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கடம்பவனேஸ்வரர் கோவிலில், நேற்று 31ல் அதிகாலையில் இருந்து பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மாரியம்மன்கோவில், ஐயப்பன் கோவில், முருகன் கோவில்,பேராளகுந்தாளம்மன் கோவில், அய்யர்மலை ரெத்தின கிரீஸ்வரர் கோவில், சிவாயம் சிவபுரீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில், ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்து சிறப்பு அபிஷேகம் செய்து சுவாமியை வழிபட்டனர்.