ஆர்.எஸ்.மங்கலம் அருகே பொன்னியேந்தல் ஜெகமாரியம்மன் கோவில் பூக்குழி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஆக 2019 03:08
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே பொன்னியேந்தல் ஜெகமாரியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து நேர்த்திகடன் நிறைவேற் றினர். முன்னதாக வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை பக்தர்கள் கோவிலில் வைத்து வழிபாடு செய்தனர். பின் காவடி, பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் கோவில் முன் தீ மிதித்து நேர்த்திகடன் நிறைவேற்றினர். விழாவை முன்னிட்டு இரவில் கலை நிகழ்சிகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை பொன்னியேந்தல், கூடலூர் கிராமத்தினர் செய்திருந்தனர்.