பதிவு செய்த நாள்
24
ஆக
2019
03:08
திருப்பூர் : கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, திருப்பூர் ராயபுரம் கிருஷ்ணர் கோவிலில் சிறப்பு பூஜைகளும், பஜனையும் நடந்தது.கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று 23ல், நாடு முழு வதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணர் அவதாரத்தை கொண்டாடும் வகையில், சிறப்பு பூஜைகள் நடந்தன.
வெண்ணை குடத்துடன், கிருஷ்ணர் காட்சியளிப்பது போல், அலங்கார பூஜைகளும் நடந்தன. திருப்பூர் கிருஷ்ணர் கோவில், கோவில்வழி பெரும்பண்ணை கரிவரதராஜபெருமாள், வீரராகப் பெருமாள் கோவில்கள் உட்பட, பெருமாள் கோவில்களில் நேற்று 23ல், கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
ஊத்துக்குளிரோடு, குருவாயூரப்பன் கோவிலில், பக்தர் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குழந்தைகள், கிருஷ்ணர், ராதை வேடமணிந்தபடி வந்து, கோவில் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.கிருஷ்ணரை போற்றும் வகையில் பஜனை நடந்தது. கிருஷ்ணருக்கு படைத்த வெண்ணெய், பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது.