Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரணப்பெருமாள் கோவிலில் ... மாலையம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் மாலையம்மன் கோவிலில் திருக்கல்யாண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவவாடுதுறை ஆதீனத்திலிருந்து தம்பிரான் சுவாமிகள் விலகல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவவாடுதுறை ஆதீனத்திலிருந்து தம்பிரான் சுவாமிகள் விலகல்

பதிவு செய்த நாள்

17 செப்
2019
01:09

தஞ்சாவூர்:- ஆதீனத்திற்கு சொந்தமான குளம் துார் வாரியதில், அரசியல் கட்சியினரிடம் பணிந்து போக வலியுறுத்தியதால், சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள், ஆதீன பொறுப்புகளில் இருந்து விலகி உள்ளார்.

திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான, திருவிடைமருதுார் மகாலிங்க சுவாமி கோவிலில், கட்டளை தம்பிரானாக இருந்தவர், ஸ்ரீமத் சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள், 55.கடிதம்இவர், ஓராண்டாக, மகாலிங்கசுவாமி கோவிலுக்கு சொந்தமான, 10க்கும் மேற்பட்ட குளங்களில், துார் வாரும் பணியை மேற்கொண்டார்.தற்போது, உடல் நிலையை காரணம் காட்டி, ஆதீன தம்பிரான், திருக்கூட்டத்திலிருந்து விலகுவதாக, தலைமை மடத்திற்கு, நேற்று முன்தினம் இரவு, கடிதம் அளித்தார்.இதையடுத்து, திருவாவடுதுறை ஆதீனம், 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் உத்தரவிற்கிணங்க, ஆதீன மடத்தின் திருக்கூட்டத்து அடியவர் பொறுப்பிலிருந்து, சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள் விடுவிக்கப்பட்டார்.அவரிடம் இருந்த மந்திர காஷாயம், வேடம் முதலியவற்றை, மடத்தில் ஒப்படைத்தார். அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகளிடம் ஆசி பெற்று, மடத்தில் இருந்த வெளியேறினார்.

இது குறித்து, மடத்து நிர்வாகிகள் கூறியதாவது: திருவிடைமருதுார் பகுதியில், ஆதீனத்துக்கு சொந்தமாக, பல்வேறு கிராமங்களில், 32 குளங்கள் உள்ளன. இதில், 10 குளங்களை, பல்வேறு ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்டு, பல ஆண்டுகளுக்கு பின், அதை துார் வாரி, குளத்தில் தண்ணீர் நிரப்ப, சுவாமிநாத தம்பிரான் ஏற்பாடுகளை செய்தார்.பதவி விலகல்இந்த குளம் துார் வாரும் போது, ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்புகளை காட்டினர். மேலும், சில அரசியல் கட்சியினர், குளம் துார் வாரும் ஒப்பந்தத்தையும், துார் வாரும் மண்ணையும் தங்களுக்கு தர வேண்டும் என, மிரட்டல் விடுத்தனர்.ஆனால், தம்பிரான் சுவாமிகளோ, கோவில் நிர்வாகமே, நேரடியாக, துார்வாரும் பணியை செய்யும்; துார் வாரும் மண், கரையை பலப்படுத்த பயன்படுத்தப்படும் என, உறுதியாக தெரிவித்தார்.இதையடுத்து அரசியல் கட்சியினர், தொடர்ந்து, தம்பிரான் சுவாமிகளுக்கு நெருக்கடி கொடுத்தனர். மேலும், குருமகா சன்னிதானத்திடம், தம்பிரான் சுவாமிகள் குறித்து புகாரும் அளித்தனர். குரு மகாசன்னிதானம், ஆன்மிகப் பணிகளில் மட்டும், கவனம் செலுத்தவும். குளம் துார் வாரும் பணியை முன்னெடுக்க வேண்டாம் என, கூறிஉள்ளார்.குளம் துார்வாரியதில் அரசியல் கட்சியினர் மற்றும் மடத்தின் நிர்வாகம் அளித்த நிர்ப்பந்தம் காரணமாக, மனமுடைந்த நிலையில் இருந்த தம்பிரான், இந்த பொறுப்பே வேண்டாம் எனக் கூறி, பதவியில் இருந்து விலகி விட்டார்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.காசிக்கு யாத்திரை பதவி விலகிய, சுவாமிநாத தம்பிரான் சுவாமிகள், நேற்று முன்தினம் இரவே, வெள்ளை உடையில், காசிக்கு யாத்திரை செல்வதாக கூறி, மடத்திலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar