உடுமலை: உடுமலை மாலையம்மன் கோவிலில் நடந்த அம்மன் திருக்கல்யாண உற்சவத்தில், திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.உடுமலை காந்திசவுக்கில், பழமை வாய்ந்த மாலையம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலில், அம்மன் திருக்கல்யாண உற்சவம், கடந்த, 15ம் தேதி திருமூர்த்திமலையிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.அன்று, மாலை, பஸ் ஸ்டாண்ட் விநாயகர் கோவிலில் இருந்து, கும்பம் எடுத்து வரப்பட்டது. நேற்று, காலை 8:00 மணிக்கு, மகா அபிஷேகம் மற்றும் கணபதி ஹோமம் நடந்தது. காலை 9:00 மணிக்கு மேல், மாலையம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.