பழநி : பழநி நகரில் அரசுக்கு சொந்தமான மருத்துவமனை, பஸ் ஸ்டாண்ட், பொதுக் கழிப்பிட ங்கள், நிழற்குடைகளில் கண்டபடி வால்போஸ்டர்களை ஒட்டி சுவரை பாழாக்குகின்றனர்.
சென்னையில் பிளக்ஸ் பேனர் விழுந்து பெண் ஒருவர் பலியான பின்னர் பிளக்ஸ் பேனர் வைப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அமைப்பினரும் பேனர் வைப் பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.அரசு மற்றும் தனியார் அலுவலகம், மெயின் ரோட்டில் உள்ள வீடுகளில் வால்போஸ்டர்கள் ஒட்டுவதற்கு எந்தவிதமான கட்டுப்பாடும் யாரும் விதிப்பதில்லை. இதன் விளைவு பழநி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், அரசு முக்கிய பகுதிகளின் காம்பவுண்ட் சுவர்களில் இடைவெளி இல்லாமல் போஸ்டர்களை ஒட்டி பாழாக்கிவிட்டனர்.
இவற்றை கண்காணித்து அகற்ற வேண்டிய நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி இவ்விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி, மின்கம்பம், மரம்மீது தொங்கும் பிளக்ஸ் பேனர்கள், அரசு சுவர்களை பாழாக்கும் போஸ்டர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.