பதிவு செய்த நாள்
28
செப்
2019
03:09
பழநி, பழநி முருகன் கோயில் நவராத்திரி விழா நாளை (செப்.,29ல்) துவங்குகிறது. அக்.,8 ல் வில், அம்பு நிகழ்ச்சிக்காக மதியம் கோயில் நடை சாத்தப்பட உள்ளது.
நவராத்திரி விழாவை முன்னிட்டு, பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் நாளை (செப்.,29ல்) காப்புக் கட்டுதல் நடக்கிறது. திருஆவினன்குடி, மலைக்கோயில் உச்சிகால பூஜையில் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு காப்புக்கட்டுகின்றனர்.கோயில் நடையடைப்புமுக்கிய நிகழ்வாக அக்.,8ல் விஜயதசமி அன்று அம்பு, வில் போட்டு சூரன்வதம் நடக்கிறது. அன்று மலைக்கோயிலில் மாலை 5:30 மணிக்கு நடைபெற வேண்டிய சாயரட்சை பூஜை, பகல் 1:30 மணிக்கே நடத்தப்படும். 2:30 மணிக்கு மலைக்கோயிலில் இருந்து பராசக்திவேல் புறப்பட்ட உடன் நடை சாத்தப்படும். பெரியநாயகியம்மன் கோயிலில் இருந்து தங்கக் குதிரையில் முத்துக்குமார சுவாமி கோதைமங்கலம் சென்று அங்கு வில், அம்புபோட்டு சூரன்வதம் நடக்கிறது. மலைக்கோயில் தங்கரதப்புறப்பாடு செப்.,29 முதல் 8 வரை நிறுத்தப்படுகிறது. ஏற்பாடுகளை இணை ஆணையர் ஜெயச்சந்திர பானுரெட்டி, துணை ஆணையர் செந்தில் குமார் செய்கின்றனர்.