திண்டிவனம்: திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், ஆண்டாள் நாச்சியார் சபை சார்பில், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில், ஆன்மிக உபன்யாசம் நடந்து வருகிறது.
நான்காம் சனிக்கிழமையான நேற்று முன்தினம், ஸ்ரீ ராமனுக்கு அதிகம் தொண்டு செய்தவர் அனுமனா?, சுக்ரீவனா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.அனுமன் என்ற தலைப்பில், திண்டிவனம் ஓய்வு பெற்ற முதுகலை தமிழாசிரியர் புருஷோத்தமன் தலைமையில் ஒரு அணியும், சுக்ரீவன் என்ற தலைப்பில், திண்டிவனம் வள்ளலார் மன்ற தலைவர் கண்ணையன் தலைமையில் ஒரு அணியும் பேசினர்.நடுவராக பேராசிரியர் வேட்டவராயன் செயல்பட்டார்.நிகழ்ச்சியில், திண்டிவனம் தமிழ்சங்க தலைவர் ராசமாணிக்கம், திண்டிவனம் மனவளக்கலை மன்ற தலைவர் ஆசைதம்பி, எழுத்தாளர் ராஜமாணிக்கம், கோவில் அதிகாரி சங்கர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை, ஆண்டாள் நாச்சியார் சபை செயலாளர் பாண்டியன், தலைவர் சீனுவாசன் உள்ளிட்டவர்கள் செய்திருந்தனர்.