Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) பண புழக்கம் ரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, ... கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) குழந்தை பாக்கியம் கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) ...
முதல் பக்கம் » வைகாசி ராசிபலன் (14.5.2020 முதல் 14.6.2020 வரை)
மிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) குருவால் செல்வாக்கு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2019
15:56

சுக்கிரன் அக்.29 வரையும், அதன் பின் குருவும் நற்பலன் கொடுப்பர். மற்ற கிரகங்கள் அனைத்தும் சாதகமற்ற நிலையில் இருப்பதால் எந்த ஒரு செயலையும் முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியதிருக்கும். மாத முற்பகுதியில் தெய்வ அனுகூலம் கிடைக்கும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் வரவு  இருக்கும். பக்தி உயர்வு மேம்படும். வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும்.

அக்.28க்கு பிறகு குருவால் செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.  குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும்.  உறவினர் வகையில் வீண்பகை ஏற்பட வாய்ப்புண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். செவ்வாயால் இருந்த அலைச்சல், மனவேதனை,  மனைவி வகையில் ஏற்பட்ட பிரச்னை நவ.12க்கு பிறகு மறையும். அதன் பிறகு கணவன், மனைவி இடையே இணக்கம் அதிகரிக்கும்.   பெண்கள் குடும்பத்தினருடன் புனித தலங்களுக்கு செல்வர். தோழிகள் உதவிகரமாக இருப்பர். அக்.28க்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். புதிய பதவி தேடி வரும். நவ.12க்கு பிறகு பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை.

சிறப்பான பலன்கள்

தொழிலதிபர்களுக்கு தீயோர் சேர்க்கையால் ஏற்பட்ட பணவிரயம் நவ.12 க்கு பிறகு மறையும்.
ஆன்மிக புத்தகம் மற்றும் பூஜை பொருள் வியாபாரிகள் அதிக லாபத்தை சம்பாதிப்பர்.  பணியாளர்களுக்கு சுக்கிரனால் விரும்பிய சலுகை, சக ஊழியர் களின் உதவி கிடைக்கும்.
ஐ.டி. துறையினருக்கு பெண்களால் ஏற்பட்ட தொல்லை மறையும்.
ஆசிரியர்கள் அக்.28க்கு பிறகு குருவால் கவுரவம் கிடைக்கும். பணியிடத்தில் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். புகழ், பாராட்டு கிடைக்கும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவர். சக கலைஞர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு  உதவி செய்வர்.  விவசாயிகள் மஞ்சள், தக்காளி, பழ வகைகள் மூலம் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
பள்ளி மாணவர்களுக்கு அக்.28க்கு பிறகு படிப்பில் ஈடுபாடு கூடும்.  ஆசிரியர்கள் மத்தியில் நன்மதிப்பு பெறுவர்.கல்லூரி மாணவர்களுக்கு  உதவித்தொகை, கல்விக்கடன் கிடைக்கும்.

சுமாரான பலன்கள்

தொழில் அதிபர்களுக்கு மறைமுகப்போட்டி, பகைவர் தொல்லை இருக்கும். தொழில் ரீதியாக அடிக்கடி பயணம் ஏற்படலாம்.
வியாபாரிகள் தரம் தாழ்ந்த பெண்களின் நட்பால் அவப்பெயரைச் சந்திக்க நேரலாம் கவனம்.
அரசு பணியாளர்கள் பணிச்சுமையை சமாளிக்க முடியாமல் திணறுவர்.
மின்சாரம், நெருப்பு தொடர்பான பணியாளர்கள் கவனக்குறைவால் சிரமப்பட நேரிடலாம்.
ஐ.டி.,துறையினர் அக்.28 வரை பணிச்சுமையால் கடின உழைப்பை சிந்த வேண்டியிருக்கும்.
மருத்துவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுவது அவ்வளவு எளிதல்ல.
வக்கீல்கள் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகலாம். வழக்குகளில் சுமாரான முடிவு கிடைக்கும்.
ஆசிரியர்கள் வேலை நிமித்தமாக சிலர் குடும்பத்தை விட்டு பிரிய நேரலாம்.
போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் அதிகாரிகளின் அடக்குமுறையை சந்திப்பர்.
அரசியல்வாதிகளுக்கு எதிர்கட்சியினரால் நெருக்கடி உருவாகும். பணப்பிரச்னையும் வரலாம்.
கலைஞர்கள் அக். 29க்கு பிறகு தடைகளை சந்திக்க வேண்டியதிருக்கும். புகழ், பாராட்டு தட்டி பறிக்கப்படலாம்.
விவசாயிகள் முதலீடு தேவைப்படும் பணப்பயிரை தவிர்க்கவும். சொத்து வாங்கும் எண்ணம் தள்ளிப் போகும்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் போட்டிகளில் வெற்றி பெறுவது அரிது.

* நல்ல நாள்: அக்.19,20, 24,25,30,31, நவ.1,2, 8,9,10,11,12,16
* கவன நாள்: நவ.3,4,5 சந்திராஷ்டமம்
* அதிர்ஷ்ட எண்: 6,7
* நிறம்: வெள்ளை, மஞ்சள்

பரிகாரம்:
●  சனியன்று பெருமாளுக்கு துளசிமாலை
●  வெள்ளியன்று சுக்கிரனுக்கு அர்ச்சனை
●  தினமும் காலையில் சூரிய நமஸ்காரம்

 
மேலும் வைகாசி ராசிபலன் (14.5.2020 முதல் 14.6.2020 வரை) »
temple
பொறுப்புடன் கடமையாற்றும் மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் சுக்கிரன் ஜுன் 4ல் வக்கிரம் அடைந்து ... மேலும்
 
temple
இந்த மாதம் குருவால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சி நடந்தேறும். செல்வாக்கு ... மேலும்
 
temple
இந்த மாதம் உங்கள் ராசியில் இருக்கும் சுக்கிரன் ஜுன் 4 வரை நன்மை கொடுப்பார். அதன் பிறகு வக்கிரம் அடைந்து ... மேலும்
 
temple
இந்த மாதம் சூரியன், குரு, சனி, கேது ஆகியோரால் நற்பலன் தொடர்ந்து கிடைக்கும். மேலும் புதன் மே24 வரை நன்மை ... மேலும்
 
temple
இந்த மாதம் 11ம் இடத்தில் இருக்கும் ராகு, 10ம் இடத்தில் இணைந்திருக்கும் புதன், சூரியன் முன்னேற்றத்தை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.