பொருள்: அர்ஜுனா! பக்தியால் உலக விஷயங்களில் நாட்டம் இன்றி வாழ்பவன் பரம்பொருளை அடையும் பேறு பெறுகிறான். எல்லாம் அறிந்தவரும், ஆதி அந்தம் இல்லாதவரும், எல்லாவற்றையும் ஆள்பவரும், நுட்பம் மிக்கவரும், எல்லாப் பொருட்களையும் தாங்கி நிற்பவரும், சிந்தனைக்கு எட்டாதவரும், சூரியனைப் போல ஒளி மிக்கவரும், அறியாமை அற்றவருமாக கடவுள் இருக்கிறார். எவன் ஒருவன் அவரைச் சிந்தித்தபடி இறக்கும் தறுவாயிலும் தன் புருவ நடுவில் மனதை நிலைநிறுத்தி தியானம் செய்கிறானே அவன் கடவுளைச் சேரும் பாக்கியம் அடைவான்.