பதிவு செய்த நாள்
06
நவ
2019
12:11
கிருஷ்ணகிரி: பர்கூரில், இஸ்கான் சார்பில், ஜெகன்நாதர் தேர்த்திருவிழா நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில், முதல் முறையாக இஸ்கான் சார்பில், ஜெகன்நாதர் தேர்த்திருவிழா நேற்று முன் நடந்தது. இதையொட்டி காலை, 10:00 மணிக்கு, ஊஞ்சல் உற்சவம், ஆன்மிக சொற்பொழிவும் மதியம், 1:00 மணிக்கு ஆரத்தி, மஹா பிரசாத விருந்தும் அளிக்கப்பட்டது. மாலை, 5:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை தேர்த்திருவிழா நடந்தது. தேர் பவனி பர்கூர் மெயின் ரோட்டில் இருந்து, திருப்பத்தூர் இணைப்புச்சாலை, ஜெகதேவி சாலை, கிருஷ்ணகிரி மெயின் சாலை வழியாக சென்றது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். இத்திருவிழாவையொட்டி, மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, 2,000க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். திருவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.