பிரான்மலை திருக்கொடுங்குன்றநாதர் கோயில் தேரோட்டம்



பிரான்மலை: சிங்கம்புணரி அருகே பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயில் தேரோட்டம் நடந்தது.

சங்க இலக்கியத்தில்பாடல் பெற்ற இக்கோயிலின் சித்திரைத் திருவிழா மே 1ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

10 நாள் மண்டகப்படியாக தினமும் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்து வருகிறது. மே 5ல் திருக்கல்யாணம் நடந்தது. 9ம் நாளான நேற்று சித்திரை தேரோட்டம் நடந்தது.

அதிகாலை 3:00 மணிக்கு பிரியாவிடையுடன் திருக்கொடுங்குன்றநாதர் பெரிய தேரிலும், குயிலமுதாம்பிகை அம்பாள் சிறிய தேரிலும் எழுந்தருளினர். விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர், தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு காலை 5:30 மணிக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகள் வடம்பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.

நான்கு ரத வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது. வழி நெடுகிலும் பக்தர்கள் அர்ச்சனை செய்து சுவாமி அம்பாளை வழிபட்டனர்.

மாலை 5:30 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. பக்தர்கள் சிவசிவ கோஷம் முழங்கி வழிபட்டனர். வாழைப்பழம், மாம்பழம் உள்ளிட்டவற்றை பக்தர்கள் கூட்டத்தில் வீசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அங்காள பரமேஸ்வரிஅம்மன் கோயில் மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்