அவிநாசியப்பர் தேரை நிலை சேர்த்த பக்தர்கள் இன்று கருணாம்பிகை அம்மன் தேரோட்டம்



அவிநாசி, : அவிநாசியிலுள்ள ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவில், அவிநாசியப்பர் தேரோட்டம் கடந்த, 2 நாட்கள் நடந்தது.

நேற்று காலை, மேற்கு ரத வீதியில் இருந்து தேரோட்டம் துவங்கியது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாத பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தினர். வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி மற்றும் மெயின் ரோட்டில் ஆடி அசைந்து சென்ற அவிநாசியப்பர் தேர், மாலை, 3:40 மணிக்கு நிலை சேர்ந்தது. தேர் இழுத்த பக்தர்களுக்கு கோவில் சார்பாகவும், மண்டபத்தார் மற்றும் தன்னார்வ அமைப்பினர் சார்பாகவும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தன்னார்வலர்கள், அறக்கட்டளைகள், சமூக அமைப்புகள் மூலம் நீர் மோர், தண்ணீர் பாட்டில்கள், பழரச பானங்களும் வழங்கப்பட்டன. அவிநாசி டி.எஸ்.பி., சிவகுமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இன்று காலை சிறிய தேர் எனப்படும் ஸ்ரீகருணாம்பிகை அம்மன் தேர் வடம் பிடித்து இழுத்து பிற்பகல் நிலை நிறுத்தப்படும். அதனைத் தொடர்ந்து ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர், ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் ஆகிய தேர்களும் வடம் பிடித்து இழுத்து வரப்படும்.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்