அவிநாசி; மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, கோவை ஈஷா மையத்தின் சார்பில் ஆதியோகி சிலை ரத ஊர்வலம் நடைபெற்றது.
மஹா சிவராத்திரி விழா, வரும் பிப் 15ம் தேதி நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு கோவை ஈஷா மையத்தின் சார்பில் ஆதியோகி சிலை ரத ஊர்வலம் அவிநாசி மற்றும் திருமுருகன்பூண்டி பகுதிகளில் ஊர்வலம் நடைப்பெற்றது. சத்குரு சன்னதியில் இருந்து ஊர்வலமாக திருப்பூர் நேதாஜி அப்பேரல் பார்க்,சேவூர் கேம்பிரிட்ஜ் ஸ்கூல், சாந்தி வித்யாலயா மற்றும் அவிநாசி திருப்புக்கொளியூர் வாகீசர் காமாட்சி தாசர் மடம் மற்றும் திருமுருகன் பூண்டி ஏவிபி ஸ்கூல் ஆகிய பகுதிகளுக்கு பக்தர்களின் தரிசனத்திற்காக ஆதியோகி ரதம் ஊர்வலமாக சென்றது. பின்னர்,அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் வழிபாட்டிற்காக ஆதியோகி சிலை ரதம் வந்தடைந்தது. ஆதியோகி சிலை ரத ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இதற்கான ஏற்பாட்டினை,ஈஷா ஒருங்கிணைப்பாளர் ஜவகர் செய்திருந்தார்.