முத்தநாடு மந்தில் ‘மூன்போ’ கோவிலில் சீரமைப்பு பணி



ஊட்டி: ஊட்டி அருகே முத்தநாடு மந்தில் உள்ள ‘மூன்போ’ கோவிலில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது


ஊட்டி அருகே முத்தநாடு மந்தில் தோடர் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள பிற மந்துகளில் வசிக்கும் பழங்குடியினருக்கு தலைமையிடமாக உள்ளது. இங்குள்ள முன்போ கோவிலில் ஆண்டுதோறும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. அனைத்து மந்துகளில் உள்ள பழங்குடியினர் இங்கு கூடி விழாவை சிறப்பிக்கின்றனர். இந்நிலையில், இங்குள்ள மூன்போ கோவிலை சீரமைக்க தோடர் பழங்குடியின மக்கள் முடிவெடுத்தனர். அதன்படி இன்று முதல் கோவில் சீரமைப்பு பணிகள் துவங்கியது. பழைய மூங்கில், புற்கல் பிரித்து எடுக்கப்பட்டு புதிய மூங்கில், புற்களை கொண்டு கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது. தோடர் மக்கள் கூறுகையில்,‘எங்கள் பகுதியில் உள்ள மூன்போ கோவில், 19 ஆண்டுக்குப் பின் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவில் பணி முடியும் வரை தற்காலிகமாக அருகில் உள்ள இடத்தில் பாரம்பரிய பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு மாதங்களில் பணி முழுமை பெற்று பாரம்பரிய பூஜைகளுடன் கோவில் திறக்கப்படும்,’என்றனர்


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்