சற்குரு நாதரின் குரு பூஜை மரகன்று நடவு செய்ய முடிவு



குன்னுார்: கிராமங்கள் தோறும் நீலகிரியின் பாரம்பரிய மர கன்று நடவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.


குன்னுார் சற்குரு, ஆஸ்ரமம் மற்றும் பள்ளியில் இன்று சற்குரு நாதரின் குரு பூஜை நடந்தது. விழாவில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். பஜனை பாடல்கள் பாடப்பட்டன. அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக, பீசலு பவுண்டேஷன் அறக்கட்டளை சார்பில், பாரம்பரிய பழ மர நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டது. சற்குரு ஆஸ்ரம தலைவர் ராஜு தலைமையில் எலுமிச்சை நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டது. அறக்கட்டளை நிறுவன தலைவர் ஷாலினி கூறுகையில்,‘‘நீலகிரியின் பாரம்பரிய பழ வகை மரங்கள், செடிகள் அழிவின் பிடியில் உள்ளன. இவற்றை பாதுகாக்கவும், அதிகளவில் வளர்க்கவும் வேண்டும். சற்குருநாதரின் குரு பூஜையில் முதல்கட்டமான பழ நாற்றுகள் நடவு செய்யப்பட்டது. கிராமங்கள் தோறும் பழ மர நாற்றுக்கள் நடவு செய்யவும், நீலகிரியின் பாரம்பரிய மர கன்று நடவு செய்யப்படும்,’’ என்றார் தொடர்ந்து, பாரம்பரிய பழ மர நாற்றுக்கள் வழங்கப்பட்டது. துணை தலைவர் லட்சுமணன், செயலாளர் பெள்ளன், பொருளாளர் மடியன் மற்றும் சற்குரு ஆஸ்ரம உறுப்பினர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்