ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் பூபதித்திருநாள் (தைத்தேரோட்டம் ) முஹூத்தக்கால் நடப்பட்டது



ஸ்ரீரங்கம்; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பூபதித்திருநாள் ( தை தேர்) இன்று அங்குரார்ப்பணம் (முஹூத்தக்கால் நடும் வைபவம்) நடைபெற்றது.


ரங்கநாதருக்கு ராமர் கொண்டாடிய விழா தை மாதம் நடக்கிறது. இவ்விழா ராமர் நடத்திய விழா என்பதால், பூபதி திருநாள் எனப்படுகிறது. இதை ராமரே நடத்துவதாக ஐதீகம். ஸ்ரீரங்கம் கோயிலில் மிக முக்கிய விழாவான “பூபதி திருநாள்” என்றழைக்கப்படும் தைத்தேரோட்டம் விழாவை முன்னிட்டு ஸ்தம்ப ஸ்தாபனம் (முஹூத்தக்கால் நடும் வைபவம்) நடைபெற்றது. முன்னதாக முகூர்த்தக்காலில் சந்தனம், மாவிலை, பூமாலை, உள்ளிட்ட மங்களப் பொருட்கள் அணிவிக்கப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க புனிதநீர் தெளிக்கப்பட்டது.  அதன் பின்னர் முஹூத்தக்கால் நடும் வைபவம் நடைபெற்றது. இதில் கோயில் இணைஆணையர் மாரியப்பன், ஆஸ்தான பட்டர் சுவாமிகள், திருக்கோயில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்