மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைப்பூசத்திருவிழா ஜன., 26ல்‌ துவக்கம்



வடவள்ளி; மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், வரும், ஜன., 26ம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருவிழா துவங்குகிறது.


முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில், ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா, வைகாசி விசாகம், கந்தசஷ்டி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்தாண்டு தைப்பூசத்திருவிழா, வரும் ஜன., 26ம் தேதி, காலை, 6:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து, 10 நாட்கள் நாள்தோறும் காலையும், மாலையும் திருவீதியுலாவும், சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, ஜன., 31ம் தேதி, திருக்கல்யாண உற்சவமும், பிப்., 1ம்‌ தேதி, தைப்பூச திருத்தேர் வடம் பிடித்ததும் நடக்க உள்ளது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்