வாலாஜாபாத் கண்ணபிரான் கோவிலில் பால்குட ஊர்வலம்



வாலாஜாபாத்: வாலாஜாபாத் கண்ணபிரான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, இன்று பால்குட ஊர்வலம் விமரிசையாக நடந்தது.


வாலாஜாபாத் பேருந்து நிலையம் எதிரே, கண்ணபிரான் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, இன்று காலை 10:00 மணிக்கு, அப்பகுதியில் உள்ள கன்னியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து, ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள், கண்ணபிரான் கோவில் வந்தடைந்தனர். பின், மூலவருக்கு பக்தர்கள் தங்களது கைகளாலேயே பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். தொடர்ந்து, சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்