மேல்காரணை வரதராஜ பெருமாள் கோவிலில் திருவரங்கம் கோவிலுக்கு நடை பயணம்



கண்டாச்சிபுரம்; காணை ஒன்றியம் மேல்காரணை வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து திருவரங்கம் கோவிலுக்கு பக்தர்கள் நடை பயணம் செய்தனர். காணை அடுத்த மேல்காரணை ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று காலை 7 மணி அளவில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.தொடர்ந்து வரதராஜ பெருமாள் பஜனை குழுவின் சார்பில் பிரபந்தப் பாசுரங்கள் பாடப்பட்டன. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானப் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் 20 க்கும் மேற்பட்ட பக்தர்களுடன் பஜனை குழுவினர் ஆதி திருவரங்கம் கோவிலுக்கு நடை பயணம் மேற்கொண்டனர்.கண்டாச்சிபுரம் வருகை தந்த பஜனை குழுவினருக்கு பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பஜனை குழுவின் சார்பில் பாடல்கள் பாடப்பட்டன. இதில் கண்டாச்சிபுரம், மடவிளாகம் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து நடைபெற மேற்கொண்ட மேல் காரணை வரதராஜ பெருமாள் பஜனை குழு பக்தர்கள் நேற்று இரவு எட்டு மணி அளவில் ஆதி திருவரங்கம் கோவிலில் வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை மேல்காரனை பகுதி கிராம பொதுமக்கள் செய்தனர்.


சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்?

மேலும்

நடை சாத்தும் போது பாடப்படும் சாஸ்தா அஷ்டகம்

மேலும்

சபரிமலை அவசர உதவிஎண்கள்

மேலும்