சோம என்பதற்கு உமையவளுடன் இருக்கும் சிவன் என்பது பொருள். சிவனுக்கு திருமணம் நிகழ்ந்த கிழமை, திங்கள் என்பதால் அதனை சோம வாரம் என்கிறோம். கார்த்திகை திங்கட்கிழமையில் மீனாட்சி – சொக்கநாதர் திருக்கல்யாணம் நடந்தது. சிவபெருமானுக்கு சங்காபிஷேகம், மகா அபிஷேகம் செய்ய ஏற்ற நாள் கார்த்திகை மாத திங்கட்கிழமை.