காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த, பள்ளூர் கிராமத்தில், கொள்ளுமோட்டம்மன் கோவில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் கொள்ளுமோட்டம்மன் கோவில் திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு திருவிழா முன்னிட்டு ஜன.,13ம் தேதி காலை, 5:00 மணி அளவில் அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி மற்றும் ஜன.,15ம் தேதி இரவு விளக்கு பூஜையும், ஊஞ்சல் உற்வசம் நடந்தன. நேற்று பகல், 12:00 மணி அளவில் பொங்கலிடும் நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட கொள்ளுமோட்டம்மன், சிம்மவாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.