மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் விளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜன 2025 11:01
மதுரை; மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மீனாட்சி அம்மனின் ஜன்ம நட்சத்திரத்தை முன்னிட்டு ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் சார்பில் விளக்கு பூஜை நடந்தது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன் தலைமை வகித்தார். அர்ச்சகர் தர்மராஜ்சிவம், ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகை சிவசங்கர் முன்னிலை வகித்தனர்.
விளக்கு பூஜையை டாக்டர் நல்லினி துவக்கி வைத்தார். பூஜையை ஸ்ரீமந் நாயகியார் வித்யாமந்திர் மெட்ரிக் பள்ளி தாளாளர் கீதாபாரதி நடத்தினர். ராமகிருஷ்ண மடம் சுவாமி அர்க்கபிரபானந்தர், இயக்கத் தலைவர் பொன்னுச்சாமி, நகர் செயலாளர் வாசுதேவன், துணைத் தலைவர் குமார், செயலாளர் முரளிதரன், ஆதிசேஷன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.