கோவிலில் உள்ள ஒவ்வொரு சன்னதிக்கும் தனிச்சிறப்பு உண்டு. முக்கிய சன்னதி என்பது ஜனாதிபதி என உதாரணத்திற்கு வைத்துக் கொள்வோம். குடும்ப அட்டை பெற அவரிடம் செல்லத் தேவையில்லை. நம் ஊர் பிரச்னையை மாவட்ட ஆட்சியர் தீர்த்து விடுவார்! அது போலதான் கோயிலும். ஜனாதிபதியின் ஆணை என்றாலும், தனித்தனி துறைகளாக நிர்வாகம் செயல்படுகிறது. அது போல பிரதான சக்தியின் ஆணையை பெற்று அருள்புரியும் பரிவார தெய்வங்களின் சன்னதிகளை தரிசிப்பதே சரியான முறை.