மாலை கோவிலில் நோய் நீங்க உருவ பொம்மை வைத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2025 10:01
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, சிங்கையன்புதூர் மாலை கோவிலில் காணும் பொங்கல் மாடுகளை ஊர்வலமாக அழைத்து வந்து நோய் நீங்க உருவ பொம்மை வைத்து விவசாயிகள் வழிபட்டனர்.
கிணத்துக்கடவு, சிங்கையன்புதூரில் உள்ள மாலை கோவிலில் காணும் பொங்கலையொட்டி கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கால்நடைகளுக்கு நோய் ஏற்படாமல் இருக்க கோவில் வளாகத்தின் முன்பு கால்நடை உருவ பொம்மை வாங்கி வைத்து வழிபடுவது வழக்கம். இவ்வாறு செய்தால் கால்நடைகள் நோய் நீங்குவதாக அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. பொங்கல் துவங்கியதில் இருந்து மூன்று நாட்கள் மாடுகள் கருவுற்றுப் பிறந்தால் அந்த மாட்டினை சாமிக்கு நேர்ந்து விடுவது வழக்கம். இதைத்தொடர்ந்து சிங்கையன்புதூர், கல்லாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும், பொங்கல் அன்று பிறந்த மாட்டினை அலங்காரம் செய்து மேளதாளத்துடன் ஊர்வலமாக கோவிலை சுற்றி அழைத்து வந்து விவசாயிகள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கோவில் வளாகத்தில் வள்ளி கும்மியாட்டம், குழந்தைகளுக்கான, ராட்டினம் போன்ற விளையாட்டுகள் இடம்பெற்றிருந்தது.