பதிவு செய்த நாள்
30
டிச
2019
03:12
கரிநாள் என்பது “சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாளே கரிநாள்” என்பதாகும். அதாவது, அந்த மாதத்தில் இருக்க வேண்டிய சராசரி சூரிய கதிர்வீச்சின் தாக்கத்தை விட, அதிக சூரிய கதிர்வீச்சின் தாக்கம் இருக்கும் நாளே கரிநாள் எனப்படுகிறது. இந்த கரிநாட்கள் வருடா வருடம் மாறாமல், எல்லா ஆண்டுகளும் ஒரே தமிழ் மாத தேதியில் தான் வரும் என நம் முன்னோர்கள் கணித்து வைத்துள்ளார்கள். சூரிய கதிர் வீச்சின் தாக்கம் அதிகம் இருந்தால் மனிதர்களின் உடல் உறுப்புகள் வேலைசெய்யும் தன்மையும், மனநிலையும் மாறுபடும் . எனவே இந்த கரிநாட்களில் எந்த ஒரு நல்ல செயல்களை செய்வைதை தவிர்க்க வேண்டும் என அறிவியல் ரீதியாக கூறப்படுகிறது.
ஆண்டு தோறும்
சித்திரை-6, 15
வைகாசி- 7, 16, 17
ஆனி- 1, 6
ஆடி-2, 10, 20,
ஆவணி-2, 9, 28,
புரட்டாசி- 16, 29,
ஐப்பசி-6, 20,
கார்த்திகை-1, 10, 17,
மார்கழி-6, 9, 11,
தை-1, 2, 3, 11, 17,
மாசி-15, 16, 17,
பங்குனி-6, 15, 19.
ஆகிய நாட்களில் வரக்கூடிய கரிநாட்களில் நல்ல காரியங்களை செய்யாமல் இருப்பது சிறந்தது.