திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஒரு நாள் காத்திருப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12செப் 2022 09:09
திருப்பதி : திருமலை ஏழுமலையானை தரிசிக்க தர்ம தரிசனத்தில் பக்தர்கள் ஒருநாள் முழுவதும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருமலையில் வழக்கமாக சனி, ஞாயிறு போன்ற வார இறுதி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும், அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை முதல் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. நேற்று காலை முதல் வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள, 32 அறைகள் நிறைந்து பக்தர்கள் வெளியில் உள்ள வரிசையில் ஏழுமலையான் தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர். அதனால் தர்ம தரிசனத்திற்கு ஒருநாளும், 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு 4 - 5 மணிநேரமும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 80 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தினர்; 35 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியல் மூலம் நேற்று ஒரு நாள் மட்டும் தேவஸ்தானத்திற்கு 4.22 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது.